சுவிட்சர்லாந்து இறைச்சிக்கடை மீது ஹேக்கர்கள் தாக்குதல் (முதல் சம்பவம் இது)



சுவிட்சர்லாந்து  பேர்னில் உள்ள இறைச்சிக் கடை குளிரூட்டிகள் மீது  இணையக் குற்றவாளிகள் (ஹேக்கர்கள்) தாக்கியமையால் அந்தக் கடை, உணவைப் பாதுகாப்பதற்காக தற்காலிகமாக மூடப்பட்டது.


இணையத் தாக்குதலின் விளைவாக, எங்களின் குளிரூட்டிகள் மற்றும் உறைபனி அலகுகளின் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகள் சேதப்படுத்தப்பட்டன,” என்று லூத்தியின் ஃப்ளீஷ்வாரன் என்ற இறைச்சிக் கடை இன்று (5) தனது குறப்பிட்டது.


சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF  இந்தச் சம்பவம் குறித்து முதலில் செய்தி வெளியிட்டது. உணவுப் பாதுகாப்பு தொடர்பான அபாயங்களைத் தவிர்ப்பதற்காக, கடை உரிமையாளர்கள் குளிர்பதன அமைப்புகளை பிரதான மின் இணைப்பிலிருந்து துண்டித்து, கடையைத் தற்காலிகமாக மூடினர்.


சுவிட்சர்லாந்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட இந்த வகையான தாக்குதல் இதுவே முதல் முறையாகும். சமீபத்தில், இணையக் குற்றவாளிகள் ஐரோப்பிய கடைகளில் உள்ள குளிர்பதன அமைப்புகளைத் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


- Swissinfo - 




No comments

Powered by Blogger.