ஜனாதிபதிக்கு வங்கதேசம் விடுத்துள்ள அழைப்பு


இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையூன் கபீரினால் (Humaiun Kobir) இன்று (18)  ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.


இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல், வர்த்தகம், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.


பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.