நாட்டிலிருந்து வெளியேறிய 500 அரசாங்க பொறியியலாளர்கள் - சஜித் கவலை


இலங்கையிலிருந்து 500 அரசாங்க பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறித்து  சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளதுடன், திறமையான நிபுணர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் நாட்டின் அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். 


1,500 ஆக இருந்த பொறியியலாளர்களின் எண்ணிக்கை, 500 பேர் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக 1,000 ஆகக் குறைவடைந்துள்ளது. 

 

அரசாங்க பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கள வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை மீள வழங்குவதுடன், அதனை 25,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த குறித்த கொடுப்பனவு, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுத்தப்பட்டது.

 

 மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து அடிக்கடி கவலைகள் வெளியிடப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அவசியம் என சஜித்  குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.