முடங்கியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்


அரச பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் எதிர்நோக்கும் நீண்டகால சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாத நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வழமையான நிர்வாக மற்றும் சேவை நடவடிக்கைகள் இன்று (18)  பாதிக்கப்பட்டன.


2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, 20 சதவீதக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தென்கிழக்குப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம் (SEUEOA), தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (SEUEU), பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழு (UTUJC) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் (Inter University Trade Union Federation) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் இவ்வடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது. 

No comments

Powered by Blogger.