இலங்கை குறித்து பெலாருஸ் அரசு எடுத்துள்ள தீர்மானம்
உயர் கல்வி கற்பதற்காக முதன்முறையாக பெலாருஸ்ஸுக்கு வருகை தரும் இலங்கை மாணவர்களிடம் இருந்து அறவிடப்படும் நுழைவுக் விசா கட்டணத்தை ரத்து செய்ய பெலாருஸ் அரசு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத், அந்நாட்டுக்கு மேற்கொண்ட விஜயத்தின் விளைவாகவே இது இடம்பெற்றுள்ளது.
பெலாருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டுக்கு வருவதற்கு விசா பெறும் முறையை எளிதாக்குவதற்கான அவசியமான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை அந்நாட்டில் கல்வி கற்க எதிர்பார்த்துள்ள இலங்கை மாணவர்களுக்கும், பெலாருஸில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாக அமையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment