காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் தீ


காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று -8- ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை 


தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட காலி துறைமுகப் பொலிஸார், இலங்கை கடற்படையின் 'தக்ஷிண' முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேச மீன்பிடிச் சமூகத்தினர் இணைந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.