எனது மரணத்திற்கு பிறகு, எனது ஜனாஸாவை...
மேல்நிலை பள்ளியில் படிக்கும் போது ஷப்தர் ஹாஸ்மி உடல்நலம் பாதிக்கப்பட பரிசோதனையில் காலில் ஒரு எலும்பில் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட அறுவை சிகிச்சை, கீமோதெரபி மூலம் சரிசெய்யப்பட்டது.
மாதம்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்ததில் ஷப்தர் ஹாஸ்மி புற்றுநோய் பாதிப்பு முழுவதுமாக குணம் ஆனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அறிவியல் படித்து வந்த நிலையில் ஒரு மாதம் முன்பு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் சிகிச்சை அளித்தும் இடைவிடாத இருமல் சளி குறையாததால் மகனை உடனடியாக திருவனந்தபுரம் புற்றுநோய் சிகிச்சை மையம் RCC அழைத்து வந்தனர்.
அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் மிக அபூர்வ வகை புற்றுநோய் வகை OSTEOSARCOMA CANCER அவரை பாதித்துள்ளதும், உணவுக்குழாய் வரை பரவியுள்ளதும் தெரிய வந்தது.
பாரா மெடிக்கல் சயின்ஸ் பயின்று வரும் ஷப்தர் ஹாஸ்மி தனது மருத்துவ அறிக்கையை வாசித்து நோய் முற்றிய நிலையில் இதற்கு வேறு சிகிச்சை கிடைக்காது என்பதை உணர்ந்ததுடன் இன்னும் சில நாட்களில் மரணம் உறுதி என்பதை தீர்மானித்து பெற்றோருக்கு ஆறுதல் கூறி வந்தவர் கடந்த வாரம் மரணமடைந்தார்.
மரணிப்பதற்கு சில நாட்கள் முன்பு தாயின் மடியில் படுத்திருந்த ஷப்தர் ஹாஸ்மி ஒரு வேண்டுகோள் வைத்தார்.
OSTEOSARCOMA வகை கேன்சர் எந்தவித முன்கூட்டிய அறிகுறியும் இல்லாமல் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நோய் அறிகுறி கண்டுபிடித்த பின்னர் உரிய சிகிச்சை துவங்குமுன்பே மரணத்தை தழுவும் நிலையுள்ளது.
எனவே எனது மரணத்திற்கு பிறகு எனது ஜனாஸாவை இந்த நோய் குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்ய மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் எனும் ஆவலை தெரிவித்தார்.
ஆனாலும் தங்கள் மகன் நோயிலிருந்து மீண்டு வருவான் என்று நம்பியிருந்த பெற்றோரை ஏமாற்றி வஃபாத் ஆனார். தனது மடியில் தலைவைத்து மகன் சொன்ன இறுதி ஆசையை பூர்த்தி செய்ய மகனின் ஜனாஸாவை தானம் செய்ய முன்வந்தார் தாய் ஷெபீன்.
உறவினர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாத பெற்றோர் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஷப்தர் ஹாஸ்மி உடலை தானம் செய்தனர். அல்லாஹ் பொருந்திக்கொளவானாக..🤲 Colachel Azheem

Post a Comment