15 வயது சிறுமி, அவரது குழந்தை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி, அவரது குழந்தையின் எதிர்கால நலனுக்காக, அவர்கள் இருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
'பாதுகாப்பற்ற முறையில் பிரசவித்த நிலையில் சிறுமி ஒருவர் குழந்தையுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தனிப்பட்ட ஒரு சம்பவமாகக் கருத முடியாது, தற்போதைய பொருளாதார,சமூகப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பாடல் மற்றும் நெருக்கம் குறைவது இத்தகைய சம்பவங்களுக்கான முக்கிய காரணம். பிள்ளைகள் தமது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் சூழலை உருவாக்குவதுடன், குடும்பங்களுக்குள் திறந்த உரையாடல்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

Post a Comment