முட்டையின் விலை...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்போது சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க குறிப்பிடுகையில், தற்போது சந்தையில் முட்டையொன்று 42 ரூபாவிற்கும் 45 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அதிக மழை காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டது. அதனால் 80 வீதமான உற்பத்தியை வழங்கிய விலங்குகள் 50% - 60% ஆகக் குறைவடைந்தன.
மேலும், கடந்த காலங்களில் விலங்கு உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களின் விலைகளும் அதிகரித்தன.
இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. அத்துடன், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி பேக்கரி உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே பேக்கரிகளுக்கும் முட்டைகள் மேலதிகமாக செல்கின்றன. இதனால்தான் முட்டையின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment