ஞானசாரருக்கு காவி உடையை மீள அணிவித்தல் தொடர்பில்
ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை கிரமமாக அணிவிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஞானசார தேரருக்கு காவி உடையை மீள அணிவித்தல் தொடர்பில் மாநாயக்க தேரரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சில பௌத்த பிக்குகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி பௌத்த பிக்குகள் சிலர், சிறைச்சாலைகள் திணைக்கள தலைமையகத்திறகு சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment