இன்று பிறந்த நாளன்றே, விபத்தில் உயிரிழந்த திறமையான மருத்துவர்
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், மாத்தளை மருத்துவமனை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பொலன்னறுவையிலிருந்து மாத்தளை நோக்கித் தனியாக காரில் பயணித்தபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், அண்மையில் பொலன்னறுவை மாவட்ட பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.
அறுவை சிகிச்சைத் துறையில் சிறந்து விளங்கிய அவர், நோயாளிகளின் உயிரைக் காப்பதற்காகத் தனது வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த அர்ப்பணிப்புமிக்க மருத்துவராகத் திகழ்ந்துள்ளார்.
வெளித்தோற்றத்தில் கண்டிப்பானவராகத் தெரிந்தாலும், உள்ளத்தில் குழந்தை போன்ற அன்பும் கனிவும் கொண்ட மனிதநேயமிக்க மருத்துவர் என அவருடன் பணியாற்றியவர்களும் பழகியவர்களும் நினைவுகூருகின்றனர்.
மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறந்த மருத்துவர், தனது பிறந்தநாளன்றே இவ்வாறு உயிரிழந்த செய்தி மருத்துவத்துறையினரையும் பொதுமக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ஆற்றிய மருத்துவச் சேவைகளும் மனிதநேயமும் என்றும் நினைவுகூரப்படும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Thusanthan Rasenthiram

Post a Comment