நடந்தது என்ன..?



முன்னைய ஆண்டுகளைப் போன்றே இம்முறையும் வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கான எதிர்க்கட்சியின் ஆரம்ப உரையைத் நானே நிகழ்த்துவேன் என ஆரம்பத்தில் எதிர்பார்த்திருந்தேன். எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுரகுமார  வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விவாதத்தைத் தொடங்கி வைப்பதே பொருத்தமானதாக இருக்கும் எனக் கட்சித் தலைமை தீர்மானித்து.


இந்தத் தீர்மானம் கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாற்றம் குறித்துத் எனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. அந்தந்த நேரத்துச் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். நாம் ஒரு அரசியல் கட்சி. இது ஒரு பொதுவான தீர்மானமாகும்.


இது கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்த வழக்கம். ஆனால், அந்த நேரத்தில் ஒரு கட்சியாக நாம் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையைப் பின்பற்றுவது அவசியமானதாக இருந்தது என நான் நினைக்கிறேன். அதுதான் நடந்தது. இந்த மாற்றம் கட்சியின் கூட்டுத் தீர்மானம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். இது தொடர்பில் கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. 


SJB யின் பாராளுமன்ற உறுப்பினர் Dr ஹர்ஷ டி சில்வா 

No comments

Powered by Blogger.