பில்லியன் பில்லியனாக வருமானமீட்டி முன்கூட்டியே இலக்கை எட்டிய திணைக்களம்
2026 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டிருந்த வருடாந்த வருமான இலக்கை விட அதிக வருமானத்தை உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஈட்டியுள்ளது.
அதற்கமைய, 2,402 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 16 ஆம் திகதியாகும் போது 2,441.9 பில்லியன் ரூபாய் வருமானத்தை உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஈட்டியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதே திகதியில் 491 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானத்தை அந்த திணைக்களம் ஈட்டியுள்ளது.

Post a Comment