மனித மாமிசத்தைக்கூட விற்பனை செய்து, பணம் சம்பாதிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்


ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது கிளிப்பிள்ளை பேசுவதைப் போன்று பல அறிவிப்புகளை வேகமாக வெளியிட்டார். ஆனால், அவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகும். மின்சார முச்சக்கர வண்டிகள், மின்சாரத் தொடருந்துகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான முன்னேற்றங்கள் இல்லை. பழைய திட்டங்களையே மீண்டும் முன்வைக்கின்றனர்.


வாகனங்களின் விலைகளைக் குறைப்பதாகவும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு வழிவகுப்பதாகவும் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்டது. இளைஞர்களும் யுவதிகளும் அந்த எதிர்பார்ப்பிலேயே வாக்களித்தனர். இன்று அவர்களிடம், உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன்.


நாட்டையும் மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இறுதியில் மனித மாமிசத்தைக்கூட விற்பனை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.


- பத்தரமுல்ல சீலரத்ன தேரர் -

No comments

Powered by Blogger.