சஷிக்கு 2 ஆண்டுகள் சிறை - உடனடியாக விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவு


விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.


குறித்த தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அதனை நிராகரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


மேலும், நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக அவரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.