போதைப்பொருள் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள நபர்கள், குடும்பத்தினர் 076 96 27 761 இலக்கத்துடன் தொடர்புகொள்க


புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புனர்வாழ்வுப் பணியக பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். ஹமீத் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் போதைப்பொருள் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 076 96 27 761 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


சட்டம் உங்களை புனர்வாழ்வுக்காக அழைத்துச் செல்லும் வரை காத்திருக்காமல், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுயவிருப்பத்தின் பேரில் உங்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.


No comments

Powered by Blogger.