ஞானசாரருக்கு உடனடியாக ஜனாதிபதி, மன்னிப்பு வழங்க வேண்டும் - UNP பிடிவாதம்


ஞானசாரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கோரியுள்ளது. 


3 முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறும், ஞானசாரரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச சிறைத்தண்டனை 18 மாதங்கள் மட்டுமே என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா வழங்கிய விளக்கத்தைச் சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சி,  ஞானசார தேரர் ஏற்கனவே இக்குற்றத்திற்காக 10 மாதங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.


தற்போதைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மகாநாயக்க தேரர்களின் பங்களிப்புடன்,  ஞானசாரருக்கு அரசாங்கம் உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.