Header Ads



கடத்திச் செல்லப்பட்ட CTB பேருந்து



கொழும்பு -  மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த CTB  பேருந்து ஒன்று திருடப்பட்டு, பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.


அதிகாலை நேரத்தில் பேருந்தின் சாவியை இரகசிய இடத்தில் மறைத்துவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கியிருந்த நிலையில், பகல் சேவைக்காக மற்றொரு ஓட்டுநர் வந்தபோது பேருந்து அங்கு காணப்படவில்லை. புறக்கோட்டைப் பகுதியில் தேடியும் பேருந்து கிடைக்காததால் உடனடியாக தீவிர விசாரணைகள் தொடங்கப்பட்டன.


இந்த நிலையில்,பேலியகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் குறித்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு பேருந்து ஓட்டுநர் தகவல் அளித்துள்ளார்.


அதன்பேரில் காவல்துறையினர் சென்று பார்த்தபோது பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், பேருந்தில் இருந்த அனைத்து எரிபொருளும் (Diesel) எடுக்கப்பட்டிருப்பது (இழுத்துக் கொள்ளப்பட்டிருப்பது) தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.