Header Ads



காவன்திஸ்ஸ யானையின் மரணம், ஜனாதிபதியினால் நிபுணர் குழு


காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும், யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்காகவும் ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமனமிக்கப்பட்டுள்ளது.


2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் இடம்பெற்ற 'காவன்திஸ்ஸ' யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளல், காட்டு யானைகளின் நலனுக்கான உரிய செயற்பாட்டு முறை ஒன்றைத் தயாரித்தல் மற்றும் யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இந்தச் செயற்பாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான தமது இறுதி விசாரணை அறிக்கை, முன்மொழியப்பட்ட காட்டு யானை நலனுக்கான உரிய செயற்பாட்டு நடைமுறைக் கட்டமைப்பு மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கை, 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.