Header Ads



வட மாகாண முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பும், நீதி கோரல் நிகழ்வும்


- எம்.ஐ.அப்துல் நஸாா் -


வட மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்ட இனச் சுத்திகரிப்பு மற்றும் அவர்களுக்கான நீதி கோரல்  நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் அமைந்துள்ள அல்-மனார் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் நடைபெற்றது.  


இக்கலந்துரையாடலை எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எல்.எம். ஷாஜஹான் தலைமை தாங்கி வழிநடத்தினாா்.  


இந் நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவரும், சட்டத்தரணியுமான பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.நபீஸ் கலந்துகொண்டார்.


கௌரவ அதிதியாக மனித உரிமைச் சட்டத்தரணியும், சத்தியப்பிரமாண ஆணையாளரும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டின் சொலிசிட்டருமான எம்.எம். பஷீர் கலந்து கொண்டாா்.  


சமூக செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான சட்டத்தரணி முஹைதீன் சாலி சிறப்புரையாற்றினார்.  


இந் நிகழ்ச்சியின் முஸ்லிம் டைம்ஸ் பத்திரிகையும் வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதி சட்டத்தரணி எம்.எம். பஷீர் அர்களினால் சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் தொழிலதிபருமான ஏ.எல். மீராசாகிப் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


 வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதிகள் குறித்து இந்நிகழ்வில் விரிவாக ஆராயப்பட்டது.  


இந் நிகழ்ச்சியில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும்  ஊடகவியலாளா்கள் கலந்துகொண்டனா்.



No comments

Powered by Blogger.