இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு, இஸ்ரேலிய அரபு மக்கள் பாடம் படிப்பித்துள்ளார்கள்


இலங்கையில், நண்பர் அனுர திசாநாயக்க தெரிவு செய்யபட்டது,  ஜனாதிபதி தேர்தலில் ஆகும்.  ஆனால் நமது மக்கள் அலையில் அள்ளுண்டு வாக்களித்தது, பாராளுமன்ற தேர்தலில் ஆகும். இவர்களுக்குதான் இன்று இஸ்ரேலில் வாழும் அரபு உடன் பிறப்புகள் எப்படி வாக்களிக்க வேண்டும் என பாடம் புகட்டி உள்ளார்கள். ஆகவே, இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எனது சலாம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். 


அராபிய தலைமையில் செயல்படும் இரு  அரபு-இஸ்ரேலிய கட்சிகள் (Hadash–Ta’al–Balad, Ra’am-United Arab List) தலா, 11, 8, என மொத்தம் 19 ஆசனங்களை பெற்று தம்மை பேரம்  பேசும் தரப்பாக நிலை நிறுத்தி உள்ளன. இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி கிடையாது. பாராளுமன்ற பிரதமர்,  அமைச்சரவை, ஆட்சிதான்.  


இன்று மாவட்டங்களில்,  அமைச்சர்களின், மந்திரிகளின், முகங்கள், பெயர்கள், தெரியாது. விலாசங்கள், தொலைபேசி எண்கள், தெரியாது. 


இப்படி, பாராளுமன்ற தேர்தலில்  வாக்களித்த இலங்கை தமிழ் பேசும் சிறுபான்மை  மக்களுக்கு தான், இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த,  இஸ்ரேலிய அரபு சிறுபான்மை மக்கள் பாடம் படிபித்து உள்ளார்கள் என்று நான் திடமாக கூறுகிறேன். 


சிந்திக்க தெரிந்த அறிவுள்ளவர்களுக்கு, நான் கூறுவதன் முழு அர்த்தம் விளங்க வேண்டும்.


- மனோ கணேசன் Mp - 

No comments

Powered by Blogger.