வாகன இறக்குமதிக்காக 1.87 பில்லியன் டொலர்கள் செலவு


இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 34.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட வாகன இறக்குமதிக்காக செப்டெம்பர் மாதத்தில் 188 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இந்த வீழ்ச்சிக்கு மத்தியிலும் 2026 ஆம் ஆண்டின் முதல் 9  மாதங்களில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1.87 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.