ஞானசாரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும் - அஸ்கிரிய பீடம்


ஞானசாரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சட்ட வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வெறகம தம்மநந்த தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகும், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஞானசாரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அது முழுமையடையாமல் போனது.


ஞானசார தேரரின் தற்போதைய நிலை குறித்து பல பிக்குகளுடன் கலந்துரையாடியதாகவும், மக்களின் மற்றும் மகா சங்கத்தினரின் கருத்துகள் கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.