உடப்பு கடற்கரையில் மர்மப் பொருள் மீட்பு


புத்தளம் - உடப்பு சின்னக்கொலனி கடற்கரையில் மிதக்கும் அமைப்பிலான இரும்புப் பொருள் கரையொதுங்கியுள்ளது.


இது நேற்றையதினம் கரையொதுங்கிய போது அதனை கரைக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலையில் பொதுமக்களின் உதவியுடன் உழவு இயந்திரம் கொண்டு இழுக்கப்பட்டது.


இது சுமார் 12 அடி நீளத்தைக் கொண்டதாகவும், அதன் நிறை சுமார் 3,000 கி.கிராமாக இருக்கும். அதனோடு டயர் ஒன்றும் சிறிய வலையும் மீட்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு ஆங்கில எழுத்துகளும் காணப்படுகின்றது.


(க. மகாதேவன்)

No comments

Powered by Blogger.