கொழும்பில் காச நோய் பரவுவதற்கு முக்கிய காரணம்


கொழும்பு நகரில் அதிக மக்கள் செறிவு காணப்படுவது, நீண்டகாலமாக காசநோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, கொழும்பு நகரில் 2019ஆம் ஆண்டு 871 காசநோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 736 ஆகக் குறைந்தது. எனினும், 2021ஆம் ஆண்டு 796 ஆக அதிகரித்தது.


2022ஆம் ஆண்டு 1,093 ஆகவும், 2023ஆம் ஆண்டு 1,130 ஆகவும் அதிகரித்த காசநோயாளர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு 1,064 ஆகவும், 2025ஆம் ஆண்டு 968 ஆகவும் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


காசநோயால் பாதிக்கப்பட்ட சிலர் உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறுவதும், நோய் தொடர்ந்து பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனினும், 2025ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் பதிவான காசநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.