உலகை உலுக்கிய சம்பவம்
காசா பகுதியில் 12 வயதான பலஸ்தீன சிறுவன் முஹம்மத் அல்-துரா கொடூரமாக கொல்லப்பட்டு நேற்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி, தனது தந்தையுடன் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அல்-துரா, தந்தையின் அரவணைப்பில் பாதுகாப்பைத் தேடிய நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தையும் மகனும் கான்கிரீட் தடுப்பொன்றின் பின்னால் மறைந்திருந்தபோது இடம்பெற்ற சம்பவத்தின் இறுதித் தருணங்கள் காணொளியாகப் பதிவாகியிருந்தன. அந்தக் காட்சிகள் உலகெங்கிலும் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு, பெரும் கவனத்தை ஈர்த்தன.
இச்சம்பவம் இரண்டாவது இன்திஃபாதா காலத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியதுடன், பலஸ்தீன–இஸ்ரேல் மோதல் வரலாற்றில் உலகளவில் அதிகம் பேசப்பட்ட சம்பவங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

Post a Comment