இலங்கையின் மொத்த சனத்தொகையில், ஒவ்வொரு ஏழு குடிமக்களுக்கும் ஒரு நாய்
நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, நாட்டில் தற்போது சுமார் 32 இலட்சம் நாய்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஏழு குடிமக்களுக்கும் ஒரு நாய் என்ற விகிதத்தில் நாய்களின் எண்ணிக்கை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானது எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், நாய்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், அதற்காகக் குறிப்பிட்ட கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, நாய்களை முறையாகப் பதிவு செய்யும்போது அவற்றுக்கான கழுத்துப்பட்டி, அடையாளக் குறியீடு மற்றும் நாயின் விபரங்கள் அடங்கிய பதிவுப் புத்தகம் ஆகியவை உரிமையாளருக்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Post a Comment