முக்கிய அறிவிப்பு


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களில் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு (Passport) பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு நாளை (29) முதல் ஆன்லைன் (Online) மூலமான நேர ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாகத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதேச அலுவலகங்களுக்கு வருகை தந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் பொதுமக்கள், அங்கு வருவதற்கு முன்னர் இணையதளம் வழியாக உரிய திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்வது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புதிய விதிமுறையானது ஒருநாள் சேவை (One-day service) மற்றும் சாதாரண சேவை (Normal service) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.