Header Ads



மில்லியன் மில்லியனாக அனுப்பிய இலங்கையர்கள்


இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 9 மாத காலப்பகுதியில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து 6,865.4 மில்லியன் (6.86 பில்லியன்) அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணம் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1,053.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.


கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணவனுப்பல் நாட்டிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களே பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.