ராஜபக்சவினருக்கு அதிகரிக்கும் சிக்கல்கள்
கஜ்ஜா" கொலை வழக்கில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என்றழைக்கப்படும் அனுஷா லக்மாலி துபாயில் கைது செய்யப்பட்டு, (27) துபாயிலிருந்து ழைத்து வரப்பட்டார். நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கஜ்ஜாவு என்ற அருண விதானகமகே என்பவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அச்சினிக்கு, கஜ்ஜாவுடன் மிகவும் நெருங்கிய உறவு இருந்தமையும், கொலை நடந்த நாள் முழுவதும் இருவரும் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டமையும் தெரியவந்துள்ளது.
மேலும், தொலைபேசித் தரவுகளை ஆய்வு செய்ததில், கஜ்ஜாவின் தொலைபேசிக்கு வந்த கடைசி சில அழைப்புகள் அச்சினியிடமிருந்து வந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.
கொலை இடம்பெற்ற உடனேயே, அவர் கடவுச்சீட்டை தயாரித்து, மார்ச் 5 திகதி தாய்லாந்தின் பாங்காக்கிற்கு புறப்பட்டுள்ளார் இதன் பின்னர் அவர் மலேசியாவிற்கும், அங்கிருந்து துபாயில் உள்ள ஷார்ஜாவிற்கும் தப்பிச்சென்றுள்ளார்.
பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில், அச்சினி கஜ்ஜாவாவை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தமை தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கருதப்படும் கஜ்ஜா, தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வலைத்தள நேர்காணலில் கலந்துக்கொண்டு ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை மற்றும் வெள்ளை வான் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்ட சில நாட்களுக்கு பிறகு, அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டிருந்தார்.
தொலைபேசி அழைப்பில் தொடங்கிய கொலை திட்டத்தின் தீர்க்கப்படாத பல இரகசியங்கள் எதிர்காலத்தில் அவரது வாக்குமூலங்கள் மூலம் வெளிப்படும் என்றும் கூறப்படுகின்றது.

Post a Comment