தற்போதைய அரசாங்கத்தில் சிறிய குறைபாடுகளைக் கண்டவுடன்...?
தற்போதைய அரசாங்கத்தில் சிறிய குறைபாடுகளைக் கண்டவுடன் மீண்டும் பழைய அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக்கூடாது என சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
நானும் ஒரு காலத்தில் இந்த அரசியல் முறைக்குள் இருந்தேன். ஆனால், அங்கு நிலவிய ஊழல் நிறைந்த கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அதிலிருந்து விலகினேன். இப்போது அந்த அரசியல் கலாசாரத்தை நிராகரிக்கும் சக்தியொன்று ஆட்சிக்கு வந்துள்ளது. இதனை நாம் சாதகமான மாற்றமாகக் கருத வேண்டும்.

Post a Comment