Header Ads



திரையரங்கில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு


அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, கிரிந்திவெல - ஹங்வெல்ல திரையரங்கு ஒன்றைச் சோதனையிட்ட போது, பெருந்தொகையான துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (17) மாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்:


துப்பாக்கிகள்:

- வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் – 02

- ரிவோல்வர் துப்பாக்கி  – 01

- வெளிநாட்டுத் தயாரிப்பு ரிப்பீட்டர் துப்பாக்கி – 01

- வெளிநாட்டுத் தயாரிப்பு 12 போர் துப்பாக்கி – 01

தோட்டாக்கள்:

- .22 ரக தோட்டாக்கள் – 3,083

- 12 போர் தோட்டாக்கள் – 398

- 9 மி.மீ ரக தோட்டாக்கள் – 278

- .32 ரக தோட்டாக்கள் – 49

- 16 போர் தோட்டாக்கள் – 35

வெடிபொருட்கள்:

- கைக்குண்டுகள் – 02

கைது செய்யப்பட்ட நபர் மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். See less

No comments

Powered by Blogger.