தொழில்வல்லுநர்களை நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்ளத் தவறினால், எதிர்காலத்திற்கு பாதிப்பு
2021/2022 ஆம் ஆண்டு முதல் இந்த வெளியேற்றம் தீவிரமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள GMOA, மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில்வல்லுநர்களுக்கு மேலதிக வரி நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சில தொழில்வல்லுநர்கள் தங்களது வருமானத்தில் கிட்டத்தட்ட 36 சதவீதத்தை நேரடி வரிகளாகச் செலுத்துவதுடன், அதிகளவிலான மறைமுக வரிகளையும் சுமந்து வருவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரடைந்து வருவதால், அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயைப் பாதிக்காத வகையில் வரிகளில் திருத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக GMOA சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, வரி விலக்கு வரம்பு மற்றும் வரி வீதங்களில் மாற்றங்களைக் கோரி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.
உயர்மட்ட தொழில்வல்லுநர்களை நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்ளத் தவறினால், அது நாட்டின் எதிர்காலத்திற்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.

Post a Comment