51 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் கட்டுநாயக்காவில் சிக்கிய இந்தியர்
சுமார் ரூ. 51 மில்லியன் (ரூ. 5.1 கோடி) சந்தைப் பெறுமதியுடைய 5.1 கிலோகிராம் 'குஷ்' வகை கஞ்சா போதைப் பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இன்று (26) மேற்கொண்ட விசேட சோதனையின் போது இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நபரின் பயணப் பொதிகளை ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் சோதனையிட்ட போது, பொதியினுள் சீல் வைக்கப்பட்ட பொலித்தீன் பொதிகளில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,100 கிராம் (5.1 கி.கி.) குஷ் வகை கஞ்சா கண்டுபிடிகப்பட்டது.
கைப்பற்றப்பட்ட குஷ் கஞ்சாவின் மதிப்பிடப்பட்ட சந்தைப் பெறுமதி ரூ. 51,000,000 (ரூ. 51 மில்லியன்) இற்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment