ஈரானுக்கு ஒரு தண்ணீர் போத்தலையாவது வழங்கக் கூடாதா..?
இந்த கப்பல்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்வரை இருக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப்பொரு்ட்கள், குடிநீர், மருந்துப் பொருட்களை பெற்றுக்காெடுக்க இடமளிக்குமாறே கேட்டுவருகிறார்கள். ஆனால் வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கை தொடர்பில் எந்த பதிலையும் வழங்காமல் மெளனமாக இருந்து வருகிறது.
ஈரான் அரசாங்கம் எமக்கு 514 மில்லியன் டொலர் செலவிட்டு உமா ஓயா நீர் வேலைத்திட்டத்தை எமக்கு உருவாக்கி தந்தது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அம்பந்தோட்டை, மாெனராகலை, பதுளை மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நீரை வழங்குவதற்கும் மின்சார சபைக்கு 120 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் உமா ஓயா திட்டம் மூலம் நாங்கள் நன்மை அடைந்து வருகிறோம்.
அன்று ஈரான் அரசாங்கம் 514 மில்லியன் டொலர் செலவிட்டு எமக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்பாேது அந்த நாட்டு, எங்களிடம் தண்ணீர் போத்தல் ஒன்றை வழங்குமாறு கோரும்போது, அதனை வழங்க முடியாது என நாங்கள் தெரிவிக்கிறோம். இதில் என்ன நியாயம் இருக்கிறது. எங்களது மனிதாபிமானம் என்ன? இது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.
முஜிபுர் ரஹ்மான் எம்பி.

Post a Comment