புதிய 50 சர்வதேச விமான சேவை நிறுவனங்களை, இலங்கையில் சேவையில் ஈடுபடுத்த திட்டம்


2030 ஆம் ஆண்டளவில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானத்தைப் பெறுதல் மற்றும் இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 05 மில்லியன்களாக அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைவது தொடர்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் சுற்றுலாத் துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (28)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


மேலும்,  10 புதிய சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டில் இலங்கையுடன் விமானப் போக்குவரத்து சேவைகளைத் தொடங்கியுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டதுடன், அந்த எண்ணிக்கையை 50 வரை அதிகரித்துக் கொள்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உலகளாவிய பிரபல்யப்படுத்தல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

No comments

Powered by Blogger.