Header Ads



4 ஆவது நாளாக பிக்குமாரின் சத்தியாகிரகம்


ஞானசார ​தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம் இன்று (19) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குமார் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அன்றைய தினம் அங்கு கூடாரம் அமைக்க முற்பட்டவேளை பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் அமைதியின்மையும் ஏற்பட்டது.


ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை தாம் குறித்த இடத்திலிருந்து நீங்கப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.