Header Ads



இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்தில் இரண்டாம் இடத்தில்...


குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்கள் எண்ணிக்கையில் இலங்கைத் தொழிலாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.


குவைத்தின் சிவில் தகவல்களுக்கான பொது அதிகாரசபை (PACI) வெளியிட்ட தரவுகளில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


குவைத்தில் உள்ள மொத்தம் 883,308 வீட்டுப் பணியாளர்களில் 86.1% பேர் (760,744 பேர்) இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.


இதில் 344,532 தொழிலாளர்களுடன் (39%) இந்தியா முதலிடத்தில் உள்ளது. 157,901 தொழிலாளர்களுடன் (17.9%) இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

No comments

Powered by Blogger.