110 கிலோ தங்கம் நேரடியாகக் களவாடப்பட்டுள்ளது
நான் இராணுவத் தளபதியாகப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், முல்லைத்தீவு மற்றும் போர்க்களப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான சுமார் 220 கிலோ தங்கம் இராணுவத்தினரால் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றப்பட்டது.
ஆனால், நான் இராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, தங்களுக்கு 110 கிலோ தங்கம் மட்டுமே கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் கைப்பற்றப்பட்ட தங்கத்தில் பாதிக்கு பாதி, அதாவது 110 கிலோ தங்கம் நேரடியாகக் களவாடப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகிறது.
போர்க்களத்தில் மீட்கப்பட்ட இந்தத் தங்கத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததிலும், அதனைப் பணமாக்கியதிலும் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்திக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக கலால்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்" என கூறியுள்ளார்.

Post a Comment