Header Ads



UNP யும், SJB யும் ஒன்றிணைகின்றன


நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு நேர்மையான, பயன்களைப் பெற்றுத் தரும் எதிர்காலத்திற்காக ஒன்றாய் இணைகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


'ஜே.ஆரின் அரசாளுகையும் நடுத்தர பாதையும்' எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கத்தால் முதன்முறையாக ஏற்பாடு செய்த கருத்தாடல் நிகழ்வு  (17) மாலை தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக்  கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு  தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட, அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நாட்டில் பல்வேறு காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூதாட்டங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கான இணைவாக இந்த இணைவு அமையாது. பதவிகளை பகிர்ந்து கொள்ள, அரசியல் சலுகைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அருவருப்பான, கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைகின்றன. மக்கள் சார்பான முற்போக்கான கொள்கைச் சட்டகத்தின் ஊடாக இந்த இணைவானது நிகழும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். See less

No comments

Powered by Blogger.