Header Ads



ஐ.நா.வுக்கு செல்லாமல், மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் கூட்டம் நடாத்தும் ஜனாதிபதி - SJB குற்றச்சாட்டு


உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிநாடுகளுக்குச் செல்லாமல் மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றம் சுமத்தியுள்ளார்.


 உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், இலங்கை வலுவான சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மாநாடுகளில் நாட்டின் தலைவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும். உலகத் தலைவர்கள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இக்காலகட்டத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிநாடு செல்வதைத் தவிர்த்துவிட்டு மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றார்.


அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகவும், புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்த அநுரகுமார திஸாநாயக்க, ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.