மிகப்பெரிய சுமையுடன் செயற்படும் NPP அரசாங்கம்
NPP அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உயர் வர்க்கத்துக்கும் பிற்போக்குவாத சக்திகளுக்கும் வேதனையாக மாறியுள்ளதால், அவை ஒன்றிணைந்து அரசாங்கத்தை கவிழ்க்கவும், மக்களை அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியடையச் செய்யவும் முயற்சிக்கின்றன. அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை எனக் கூற முடியாது
போதைப்பொருள் வர்த்தகத்தை அரசாங்கம் கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறிய அல்லது தலைமறைவாகியிருந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்
அனைத்து விடயங்களையும் 2 வருடங்களுக்குள் நிறைவேற்ற முடியவில்லை என்பது உண்மை. ஆனால் மிகப்பெரிய சுமையுடனேயே திசைகாட்டி அரசாங்கம் செயற்படுகிறது. எனவே, அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார

Post a Comment