இலங்கையை உயர்த்திய Fitch Ratings
சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் , இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன்நிலை தரவரிசையை 'CCC+' இலிருந்து 'B-' ஆக இன்று (22) உயர்த்தியுள்ளது.
இது வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைத்துள்ளதுடன், பொருளாதார அபாயங்களை எதிர்கொள்ளும் திறனையும் வழங்குகிறது என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இலங்கையின் கடன் நிலைமையானது இன்னமும் அதிகமாக இருக்கும் கடன் மற்றும் கடன் சேவை விகிதங்களால் பிணைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பு மிதமான அளவிலேயே காணப்படுவதாகவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Post a Comment