மக்களை நாய்களைக் போன்று கடித்துக்கொள்ளச் செய்த அரசாங்கங்கள்
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று 2 ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை.
வரலாற்றில் முதல் தடவையாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகவில்லை
கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இனவாதத்தை போஷித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில அரசாங்கள் சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் ஒரே கணக்கிலிருந்து பணம் வழங்கியது
இனவாதத்தை தூண்டி, மக்களை நாய்களைக் போன்று கடித்துக் கொள்ளச் செய்த அரசாங்கங்களே கடந்த காலங்களில் ஆட்சி செய்தது. எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment