‘என் கார், என் பெட்ரோல்’ என்பவர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
“உங்கள் சொந்த வளாகத்திற்குள் ‘என் கார், என் பெட்ரோல்’ என்று நீங்கள் கூறலாம், ஆனால் அந்த மனப்பான்மையைப் பொது மக்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கு கொண்டு வர முடியாது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும்,” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
தனிநபர்கள் தங்கள் சொந்த வளாகத்திற்குள் தங்களது வாகனங்கள் குறித்துத் தாங்களே முடிவெடுக்க சுதந்திரம் பெற்றிருந்தாலும், மற்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய வீதிகளுக்கு அத்தகைய சுதந்திரம் பொருந்தாது.
அமைச்சரால் கோடிட்டுக் காட்டப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, 5,000 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வீதிப் பாதுகாப்பு தகுதி ஆய்வுகளுக்கு உட்பட்டு சான்றிதழ் பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment