தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம்
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் UNP யும், SJB யும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளுராட்சி மன்றத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசாங்கம் அதில் தோல்வியடைவது உறுதியாகும். இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பாகும்.
எதிர்க்கட்சிகளுக்கு இடையே தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் சவால்களும் நிலவிய போதிலும், ஒரு தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கை கோர்க்கும். UNP யும், SJB யஇணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்திற்கு வந்துள்ளன என்றார்.

Post a Comment