தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நடத்தும் போராட்டங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நடத்தும் போராட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தலில் தமது தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளனர். அந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதே முதலில் ஒரு அரசியல்வாதியின் பொறுப்பாகும்.
தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாகாது. யாழ்ப்பாண மக்கள் இன்று வெறும் அரசியல் பேச்சுகளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மாற்றத்தையும், அபிவிருத்தியையும், தங்களது வாழ்வில் உணரக்கூடிய தீர்வுகளையும் எதிர்பார்க்கிறார்கள்.
மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்திருப்பது பதவிக்காக அல்ல, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களுடன் நின்று பணியாற்றவும். மக்களின் தீர்ப்பை மதிப்போம். மக்களின் பிரச்சினைகளுக்காகப் பணியாற்றுவோம். அரசியலை மக்களுக்கான சேவையாக மாற்றுவோம்.
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

Post a Comment