Header Ads



இலங்கைச் சிறுவர்கள் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவல்


இலங்கையில் முன்பள்ளி சிறுவர்களில் 64 சதவீதமானோர் நாளொன்றுக்கு 30 நிமிடங்களுக்கு மேலாக கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்துவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


ஆய்வில் பங்கேற்ற சிறுவர்களில் சுமார் 32 சதவீதமானோர் நாளொன்றுக்கு 10 முதல் 11 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குவதாகவும், சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினித் திரைகளைப் பயன்படுத்தியவாறு உணவு உட்கொள்வதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, முன்பள்ளி சிறுவர்களுக்கான சுகாதார மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.