ஈரான் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா, கடும் தண்டனையை எதிர்கொள்ளும் என ஈரான் அறிவிப்பு
ஈரானின் பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, கொனாரக், சபாஹர், ஜஸ்க், சிரிக் மற்றும் லவான் ஆகிய இடங்களில் இன்றிரவு (1) குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்புக்காக அமெரிக்கா வருந்தும் என்றும், "கடுமையான தண்டனையை" எதிர்கொள்ளும் என்றும் ஈரான் இராணுவமும் ஐ.ஆர்.ஜி.சி-யும் உறுதியளித்துள்ளன.
"தோல்வியடைந்த நாடான ஈரான், மிகவும் நியாயமான இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தால், அவர்கள் மீண்டும் மிகக் கடுமையாகவும் உயர் மட்டத்திலும் தாக்கப்படுவார்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்

Post a Comment