இலங்கை கடவுச்சீட்டு எப்படி உள்ளது..?
உலகளாவிய பயணச் சுதந்திரத்தை அளவிடும் தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டின் Mobility Score 53 ஆக பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 15 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். மேலும், 34 நாடுகளுக்கு சென்றடைந்த பின்னர் விசா பெற முடியும். 145 நாடுகளுக்குச் செல்ல முன்கூட்டியே விசா பெறுவது அவசியம்.
உலகளவில் ஐக்கிய அரபு இராச்சியம் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், மலேசியா நான்காவது இடத்திலும், லக்சம்பேர்க் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
Passport Reports தளத்தின் விளக்கத்தின்படி, கடவுச்சீட்டின் வலிமையை ஒரு தரவரிசை எண்ணால் மட்டும் மதிப்பிடாமல், விசா இல்லாத பயணம், சென்றடைந்த பின்னர் விசா பெறும் வசதி, மின்னணு பயண அனுமதி மற்றும் முன்கூட்டியே விசா தேவைப்படும் நாடுகள் என தனித்தனியாக தகவல்களை வழங்குகிறது.

Post a Comment